பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

173



6. மற்றபடி, நீளத் தாண்டலுக்குரிய விதி முறைகள் அனைத்தும், மும்முறைத் தாண்டலுக்கும் பொருந்தும் (173வது விதியில் 4.5 பாராக்களைக் காண்க).

ஒடும் பாதை (The Runway):

7. ஒடும் பாதையின் அகலம் குறைந்தபட்சம் 1.22 மீட்டராகும். ஒடும் பாதையின் நீளமானது எல்லையற்றது. ஆனால், ஓடிவரும் பாதையின் நீளமானது குறைந்தபட்சம் 40 மீட்டர் தூரமாவது இருக்க வேண்டும்.

குறிப்பு: ஓடி வரும் பாதையின் சரிவானது குறைந்தபட்சம் 1.100க்கு மேல் போகக்கூடாது. ஆனால் ஓடிவரும் திசையிலிருந்து மணற்பகுதியை நோக்கி வரும் பாதையின் சரிவான இறக்கம் 1:1000க்கு மேல் போகக்கூடாது.

9. எந்தப் போட்டியாளரும் ஓடிவரும் பாதையில், எந்தவிதமான அடையாளப் பொருளையும் வைத்துக் கொள்ளக்கூடாது. போட்டியை நடத்துபவர்கள் ஏதாவது வழங்கினால், வழங்குகிறதை வைத்துக் கொண்டு, அடையாளமாக ஓடும் பாதை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், தாண்டி விழுகிற மணற்பரப்பில் அடையாளப் பொருளை வைத்துக்கொள்ள அனுமதியில்லை.

போட்டி நிகழ்ச்சியானது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய பிறகு, ஒடும் பாதையில் பழகிப் பார்த்துப் பயிற்சி செய்திட, யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.