பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

175



11. தாண்ட உதவும் பலகையிலிருந்து தாண்டி விழும் மணற்பரப்பின் இறுதி வரை குறைந்தது 21 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.

12. தாண்டி விழும் மணற்பரப்பின் ஆரம்ப விளிம்பிலிருந்து குறைந்தபட்சம் 13 மீட்டர் தூரத்தில் தாண்ட உதவும் பலகை பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

13. பலகையின் அமைப்பு: தாண்ட உதவும் பலகையானது மரத்தால் அல்லது அதற்கு இணையான உறுதியான பொருள் ஒன்றால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் நீளம் 121 மீட்டள் முதல் 122 மீட்டர் வரையிலும்; அதன் அகலம் 198 மில்லி மீட்டர் முதல் 202 மில்லி மீட்டர் வரையிலும், அதன் ஆழம் (உயரம்) 100 மில்லி மீட்டள் வரையிலும் இருக்க வேண்டும். தாண்ட உதவும் பலகை வெள்ளை வண்ணப் பூச்சுடன் இருக்க வேண்டும்.

14. பிளாஸ்டிசின் அடையாளப் பலகை பற்றிய விளக்கம் நீளத் தாண்டல் பற்றிய பகுதியில் 14ம் விதியில் காண்க.

15. தாண்டி விழும் பரப்பு (Landing Area) தாண்டி விழும் மணற்பரப்பின் அகல அளவு குறைந்தது 2.75 மீட்டராவது இருக்க வேண்டும். ஓடிவரும் பாதைக்கு நடுமையமாக இருப்பது போல தாண்டி விழும் பரப்பளவானது அமைந்திருக்க வேண்டும்.

குறிப்பு : நீளத் தாண்டல் பகுதியில் 15 வது பிரிவிற்கும் கீழே உள்ள பகுதியில், மேலும் விளக்கத்தைக் காண்க