பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24.எறியும் போட்டி நிகழ்ச்சிகள்

(THROWING EVENTS)


இரும்பு குண்டு எறிதல்

Putting The Shot



போட்டிக்கான விதிமுறைகள்:

1. ஒவ்வொருவராக வந்து எறிகிற வாய்ப்பினைப் பெறுகின்ற வரிசை முறையானது, சீட்டுக் குலுக்கல் மூலமாகவே தோந்தெடுத்து முடிவு செய்யப்படவேண்டும்.

2. போட்டியில் பங்கு பெற, எட்டுப் போட்டியாளர்களுக்கு மேல் வந்திருந்தால், முதலில் 3 முறை எறியும் வாய்ப்புக்களை அனைவருக்கும் அளித்து, அதில் முதலில் அதிக தூரம் எறிந்த எட்டு பேர்களைத் தெரிந்தெடுத்திட வேண்டும்.

அந்த எட்டுப் போட்டியாளர்களுக்கும் மீண்டும் 3 முறை எறியும் வாய்ப்பினை அளித்து, அந்த மொத்த 6 எறிகளில், ஒவ்வொருவரும் அதிக தூரம் எறிந்த கணக்கினை வைத்தே வெற்றி நிலைகளை முடிவெடுத்திட வேண்டும்.

மொத்த பேர்களில் முதல் 8 பேர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, எட்டாவது இடத்திற்கு சமநிலை ஏற்பட்டு விட்டால் (Tie), அந்த இடத்திற்கு சமநிலையில்