பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


உள்ள போட்டியாளர்களுக்கு மேலும் 3 முறை எறியும் வாய்ப்புகளை அளித்து, அதில் அதிக தூரம் எறிந்த ஒருவரையே எட்டாவது போட்டியாளராகத் தேர்ந்தெடுத்திட வேண்டும்.

குறிப்பு : இங்கே சமநிலை (Tie) என்பது, ஒரே தூரத்தில் இரும்புக் குண்டினை எறிந்தவர்கள் ஆவார்கள்.

எறியும் போட்டி நடைபெறும் இடத்தில், ஒவ்வொரு போட்டியாளருக்கும், முடிந்தால், இரண்டு முறை எறிந்து பழகிப் பார்க்கும் வாய்ப்புகளை அளிக்கலாம். அதற்கு மேல் எறிந்துப் பழகிப் பார்க்க அனுமதியில்லை. அவ்வாறு தருகிற பழகிப்பார்க்கும் வாய்ப்பும் (Practice), சீட்டுக் குலுக்கல் மூலம் வரிசைப் படுத்திய வரிசை முறையில் தான், போட்டி அதிகாரிகளின் மேற்பார்வையிலே, அழைக்கப்பட்டு, எறியும் வாய்ப்பை வழங்கிட வேண்டும்.

ஒரு முறை, பூர்வாங்கப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, எறியும் வட்டத்திற்குள்ளோ அல்லது அதன் சுற்றுப்புறத்திலோ, இரும்புக் குண்டினாலோ அல்லது சாதனம் எதுவும் இல்லாமலோ, பழகிப்பார்க்க, அந்த இடங்களைப் பயன் படுத் திக் கொள்ள போட் டியாளர் களுக்கு அனுமதியில்லை.

3. ஒவ்வொரு போட்டியாளரும், அவள் எறிகிற எல்லா எறி வாய்ப்புக்களிலிருந்தும் அதிகமான தூரம் எறிந்ததையே, அதிகாரிகள் கணக்கில் குறித்து வைத்துக் கணக்கிடுவாள்கள்.