பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

179



4. இரும்புக் குண்டை எறிவது (Put) எறிவட்டத்திற்குள்ளிலிருந்து தான் இருக்க வேண்டும்.

எறி வட்டத்தின் முன் நடுப்பாகத்தின் சுற்றளவிலிருந்து, அதாவது வட்டத்தின் முதல் அரைப் பாகத்தில், ஒரு தடுக்கும் பலகை (Step Board) தரையோடு நன்றாகப் பொருந்தியிருப்பது போல் உறுதியாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

வட்டத்திலிருந்து இரும்புக் குண்டு எறிந்து விழுகிற தரைப்பகுதியானது, புல் தரைப்பகுதி யாகவோ அல்லது அதற்கு சின்டரால் ஆனத் தரைப் பகுதியாகவோ (Cinder) அல்லது அதற்கு இணையான பொருட்களாலோ ஆக்கப் பட்டிருக்க வேண்டும். அதாவது இரும்புக் குண்டு விழும் பொழுது, அது விழுந்த இடத்தை நன்றாகத் தெளிவாகக் காட்டுவது போன்று நன்கு சுவடுகளைப் பதிக்கின்ற இடமாக இருக்க வேண்டும்.

5. இரும்புக் குண்டை எறிகிற ஒரு போட்டியாளர், வட்டத்திற்குள்ளே வந்து, நிலையாக நின்று, பின் தனது எறியைத் தூக்கி எறிகின்ற முறையில் எறிய வேண்டும்.

ஒரு கையால் இரும்புக் குண்டைப் பிடித்து, தோள் முன் புறத்திலிருப்பது போல் வைத்திருக்க வேண்டும். இன்டை எறிவதற்கு முன்பு தயார் நிலையில் நிற்கிற ஏறியாளர், அந்தக் குண்டை ஒரு கையால் பிடித்திருக்கும் பொழுது, அவரது முகவாயை (Chin) ஒட்டியவாறு அல்லது தொட்டுக்கொண்டிருப்பது போல, வைக்கப்பட்டிருக்க