பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


வேண்டும். அந்த நிலையிலிருந்து, எறிகின்ற கையானது, இரும்புக் குண்டை எறிகின்ற சமயத்தில், முன்னர் கூறிய நிலையிலிருந்து கீழே இறங்கி வந்து விடக்கூடாது. அதாவது இரும்புக் குண்டைப் பிடித்திருக்கும் முன் கையானது, தோளின் பின்புறத்திலிருந்து வரக்கூடாது.

6. எறிந்து முடிக்கிற எறியாளர், தடுப்புப் பலகையின் உட்புறத்தை, அல்லது பதித்திருக்கும் தடுப்புப் பலகையின் உட்புற இரும்பு விளிம்பைத் தொட்டிட அனுமதியுண்டு.

ஒரு எறியாளர் இரும்புக் குண்டு எறிவதற்காக வட்டத்திற்குள்ளே வந்து, இரும்புக் குண்டை எறிந்த அதே வேகத்தில், தனது உடலின் ஏதாவது ஒரு பகுதியாலும் வட்டத்திற்கு வெளியே உள்ள தரைப் பகுதியை மிதித்தாலோ, அல்லது வட்ட எல்லையைக் குறிக்கும் இரும்புத் தண்டினைத் (Iron Band) தொட்டாலோ அல்லது தடுப்புப் பலகையின் மேற்பகுதியைத் தொட்டாலோ அல்லது மிதித்தாலோ அல்லது வட்டத்திற்க்கப்பால் தொட்டாலோ அல்லது விதிகளுக்குப் புறம்பான எறிகிற முயற்சியில் ஈடுபட்டாலோ, அந்த எறியை தவறான எறி என்று கூறி, அந்த எறியை அவர் கணக்கில் குறிக்காமல் விட்டு விட வேண்டும்.

மாதிரி எறிகளை எறிய முயற்சிக்கும் ஒருவர், மேற்கூறிய விதிகளை மீறியிருந்தாலும், மாதிரி எறியின் போது இடையே இருந்து குறுக்கீடு செய்கிற சமயத்திலும், எறிகிற சாதனத்தைக் கீழே விட்டெறிகிற போதும்,