பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் っ எறி வட்டத்தின் (நடுக்கோடு இழுத்தால் வருகிற) இரண்டு பக்கத்திலும், வட்டத்தை சரிபாதியாகப் பிரித்துக்காட்டுகின்ற ஒரு கோட்டினை அதாவது 50 மி.மீட்டள் அகலமுள்ள கோட்டினை 0.75 மீட்டர் தூரம் வரை போட்டுக் காட்டியிருக்க வேண்டும். அந்தக் கோடானது எறிவட்டச் சுற்றுக் கோடாக வரும் இரும்புக் கம்பியில் தொடங்கி இரண்டு புறத்திலும் நீண்டிருப்பது போல வருவதை, வெள்ளை பெயிண்டினால் போட்டிருக்கலாம். அல்லது மரம் புதைத்துக் காட்டலாம். அல்லது அதற்கு இணையான ஏதாவது ஒரு பொருளால் வைத்துக் கோடிட்டுக் காட்டலாம். இப்படிக் கோடிட்டுக் காட்டுகின்ற வெளிப்புறத்தில் போடப்பட்டு நீட்டப்பட்டுள்ள கோடுகள், வட்டத்தின் முன்புறத்திலிருந்து இரும்புக் குண்டினை எறிந்து விட்டு, பின்புறப் பகுதியாக வெளிவரும் விதி முறைக்கு ஒத்துதவும் வகையில் குறிக்கப்பட்டிருக்கிறது. (படம் கடைசியில் காண்க.) 19. எறி வட்டத்தின் அமைப்பும் அளவும் எறி வட்டத்தின் உட்புற விட்டத்தின் அளவு 2.135 மீட்டர் ஆகும். அந்தக் கோட்டின் அகலம் 5 மி.மீட்டராகும். வட்டத்தின் சுற்றுக் கோடாக விளங்கும் மேற்பகுதியானது (Rim) குறைந்தது 6 மி.மீட்டர் கன அளவினைக் கொண்டிருப்பதுடன், வெள்ள்ைப் பூச்சுடனும் விளங்க வேண்டும்.