பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 90 20. 5(BüLI's L60605 (Stop Board) அமைப்பு : இந்த தடுப்புப் பலகையானது, மரத்தால் அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பொருட்களால், கால் வட்ட வளைவு போல (Arc) அமைக்கப்பட்டு, அதன் உட்புற வளைவு முனையானது, எறி வட்டத்தின் உட்புற முனையுடன் பொருந்தியிருப்பது போல வைத்து, தரையோடு தரையாக, உறுதியாக புதைக்கப்படல் வேண்டும். 21. அளவுகள் : தடுப்புப் பலகையின் (வளைவுடன் சேர்த்து) நீள அளவு 121 மீட்டர் முதல் 1.23 மீட்டர் வரையிலும் ; அகலமானது 112 மில்லி மீட்டர் முதல் 116 மில்லி மீட்டள் வரையிலும்; உயரமானது 98 மில்லி மீட்டர் முதல் 102 மில்லி மீட்டர் வரையிலும் (அதாவது வட்டத்தின் முன்புறத் தரைக்கு மேலாக) இருக்க வேண்டும். 22. தடுப்புப் பலகையானது வெள்ளை வண்ணப் பூச்சு பெற்றிருக்க வேண்டும். இரும்புக்குண்டு, சங்கிலிக்குண்டு எறியும் களம்