பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் _– ஒவ்வொரு போட்டியாளருக்கும் அளிக்கப்படுகிற 6 எறிகளில், எது அதிக தூரம் சென்றுள்ளதோ, அந்த எறியே அதில் சிறந்ததாகக் கணக்கில் குறித்துக் கொள்ளப்படும். 4. எறிவட்டத்திற்குள்ளிலிருந்து தான் தட்டு எறியப் பட வேண்டும். தட்டினை எடுத்து எறிகிற எறியாளர், நிலையாக நின்று, பிறகு தான் எறியினைத் தொடங்கிட வேண்டும். | 5. தட்டெறியும் எறியாளர், வட்டத்தின் உட்புற விளிம்பினைத் தொட்டிட அனுமதியுண்டு. தட்டெறிவதற்காக, வட்டத்திற்குள் வந்து விட்ட எறியாளர், தட்டெறியும் முயற்சியில் முனைந்த பிறகு, தன்னுடைய உடல் உறுப்புக்களின் ஏதாவது ஒரு பகுதியால் வட்டத்திற்கு வெளியேயுள்ள தரையையோ, வட்டத்தின் சுற்றுக்கோடாக உள்ள இரும்புக் கம்பியின் மேற்புறத்திலோ அல்லது தவறான எறி முறையில் ஈடுபட்டாலோ, அது தவறான எறி என்று அறிவிக்கப்படுவதுடன், அதை கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் நீக்கி விட வேண்டும். மேற் கூறப்பட்ட விதிமுறைப்படி எதையும் மீறி விடாமல், வட்டத்திற்குள்ளே வந்து எறியும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு எறியாளர், ஏதாவது ஒரு காரணத்தினால், அறிவதை நிறுத்திய பிறகு எறிகிற தட்டினை கீழே வைத்து விட்டு, வட்டத்திற்கு வெளியே வந்து விட்டு, மீண்டும் போய் உட்டெடுத்து நிலையாக நின்று, பிறகு புதிய எறியினைத் தொடரலாம். .