பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 194 6. எறிந்த தட்டானது, வட்டத்திற்கு வெளியே பறந்து போய் விழுந்து தரையைத் தொடுகிற வரைக்கும் எறிந்தவர் அந்த எறிவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. அதன் பின், வெளியே வருகிற அந்த எறியாளர், வட்டத்தின் பாதியில், இருபுறமும் நீட்டி விடப்பட்டிருக்கும் கோட்டின் பின்புற வழியாகவே வெளிவர வேண்டும். வட்டத்தின் நடுப்பகுதியிலிருந்து வட்டச்சுற்றுக் கோட்டுக்கு நேராக 0.75) மீட்டர் தூரத்திற்கு இரு புறமும் நீட்டி விடப்பட்டிருக்கும். கோட்டிற்குப் பின்புறமாகவே வரவேண்டும். 7. எறிவட்டத்திலிருந்து 40 டிகிரி கோணத்தில் அமைந்த பரப்பளவிற்குள்ளும், பரப்பளவின் எல்லையைக் குறிக்கின்ற 50 மில்லி மீட்டர் அகலக் கோடுகளின் மீதும் விழுகின்ற தட்டு தான், சரியான எறியென்று கணக்கிடப்படும். எல்லைப் பரப்பளவினை விரித்துக் காட்டுகின்ற இருபக்கக் கோடுகளில் இருபக்கக் கோடுகளில் எத்தனை மீட்டள் தூரம் என்று குறிக்கின்ற எல்லைப் பகுதிகள் தம்மை எல்லைக் கொடி (Sector Flag) ஊன்றுவதன் மூலம் குறித்து காட்ட வேண்டும். குறிப்பு: 181 வது விதியில் 8வது பாராவில் எல்லைக் கொடியின் அளவுகள் கூறப்பட்டுள்ளன. காண்க. - 8. எறிவட்டத் திலிருந் து எறிப் படுகின்ற தரைப்பகுதியை நோக்கி, ஏற்படுகின்ற சரிவிறக்கமானது 1:1000 என்கிற அளவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.