பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் _ திரு முக்கியமாகும். தொடர்ந்து பயன்படுத்தப்படுகிற வலை என்றால், 12 மாதத்திற்கு ஒரு முறை, வலையை நன்றாகப் பரிசோதித்து, அதன் உறுதியையும் வலிமையையும் தனித்துக் கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பு: பைபர் கயிறாலான வலையை சோதித்து பரிசோதனை மேற் கொள்வது என்பது அதை வெறுமனே பார்த்துத் தெரிந்து கொள்வது அல்ல வலைகளைத் தயாரித்து அளிப்பவர்கள், வலையினுள்ளே குறுக்கும் நெடுக்குமாக இழைத்துக் கட்டியிருக்கும் வலையை, 12 மாதங்களுக்கு ஒரு முறை நன்றாகக் கூர்ந்து பரிசோதித்து, அதன் பணிக்கான வலிமையைத் தெளிவாக உறுதி செய்து கொள்ள வேண்டும். 5. வலது கை அல்லது இடது கை எறியாளர்கள் எல்லோருமே தட்றிெகின்ற நேரத்தில், அபாயம் விளைவிப்பது போல் அமைகின்ற ஆபத்துப் பகுதியானது, 98 டிகிரி அளவில் தான் இருக்கும் என்பது அனுபவப் பூர்வமாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, அந்த இடத்தில் இருக்கின்ற வலையின் அமைப்பு, எப்பொழுதும் சிறந்த வலிமையுடன் இருக்கிறதா என்பதை நன்கு தெரிந்து கொண்டே பயன்படுத்திட வேண்டும்.