பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 206 26. சங்கிலிக் குண்டுஎறிதல் (Throwing the Hammer) (விதி - 184) 1. ஒவ்வொருவராக வரிசை முறையாக வந்து எறிகிற வாய்ப்பு முறையானது, சீட்டுக் குலுக்கல் மூலமாகத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தப்படவேண்டும். போட்டியிடுவதற்காக வந்திருக்கும் போட்டியாளர்கள் எண்ணிக்கையில் 8 பேர்களுக்கு மேல் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் 3 எறி வாய்ப்புகள் (Trials) அளித்திட வேண்டும். அவர்களில் அதிக தூரம் குண்டு வீசி எறிந்த முதல் 8 பேர்களுக்கும், மீண்டும் 3 எறி வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். அந்த மொத்த 6 வாய்ப்புகளில், சிறந்ததான அதிக தூரம் எறிந்த எறியே எவற்றிக்குரியதாகக் குறிக்கப்படும். வந்த போட்டியாளர்களில் முதல் 8 பேர்களைத் தேர்ந்தெடுக்கிற பொழுது, 8வது இடத்திற்குச் சமநிலை (Tie) ஏற்பட்டால், சமநிலையில் உள்ள போட்டியாளர்களுக்கு மேலும் 3 முறை எறியும் வாய்ப்புகளை வழங்கி, அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். போட்டிக்கு வந்திருப்பவர்கள் 8 பேர்கள் அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தால், அந்த ஒவ்வொரு போட்டியாளருக்கும் 6 முறை எறியும் வாய்ப்பினை வழங்கி, அவற்றுள் சிறந்த எறியைக் கண்டறிந்து, வெற்றி நிலையை அறிவிக்க வேண்டும்.