பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


களைத் தெளிவாகப் பார்த்துத் தீர்மானிக்கமுடியும். தரையில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியாது என்பதால், முடிவெல்லைக்கோட்டுக்கு நேராக உட்புறத்தில் உயர்த்தப்பட்ட தாங்கிகளை (Stand) அமைத்து, அதன்மேல் அமரச் செய்திடல் வேண்டும்.

2. முடிவெல்லைக்கோட்டருகில், முடிவினைத் தெளிவாகக் கண்டறிய உதவுவதற்காக, போட்டா சாதனங்கள் (Photo finish) வைத்திருப்பது, தலைமை நடுவருக்கும், நடுவர்களுக்கும் உதவுவதாக அமையும்.

களப்போட்டிகள் (Field Events) 3. உயரம் தாண்டுவதாக அல்லது தூரம் எறிவதாக உள்ள எந்தப்போட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும், நடுவர்களின் முக்கிய கடமையானது, போட்டியாளர்கள் தவறில்லாமல் தாண்டினாள்களா அல்லது எறிந்தார்களா என்பதை முதலில் கண்டறிய (Judge) வேண்டும். அடுத்து, அந்த உயரத்தை அல்லது தூரத்தை அளந்திட வேண்டும். பிறகு குறிப்பேட்டில் குறித்திடவேண்டும். தவறு செய்யாமல், தாண்டுகிற அல்லது எறிகிற ஒவ்வொரு முறையும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, அளந்து குறிக்கப்படல்வேண்டும்.

உயரத்தாண்டும் அல்லது கோலூன்றித் தாண்டும் போட்டிகளில், ஒவ்வொரு முறையும் குறுக்குக்கம்பம் உயர்த்தப்படுகிறபொழுது, அது எவ்வளவு உயரம் என்பதைத் தெளிவாகவும், துல்லியமாகவும் குறித்து வைத்திடவேண்டும்.