பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் 二一 ஒரியான எறிக்குரிய விதிமுறைகள் 6. எறிவட்டத்திற்குள் இருந்துதான், சங்கிலிக் குண்டு அறியப்படவெண்டும். போட்டியாளர் வட்டத்திற்குள் நிலையாக நின்றபடி இருந்த பிறகு தான், எறியும் முயற்சியைத் தொடங்க வேண்டும். போட்டியாளர் சங்கிலிக் குண்டுடன் நின்று கொண்டிருந்தபடி, தனது ஆரம்பநிலை சுற்றுகளை (Preiminary Swings) சுழற்றுவதற்கு முன்பாக, சங்கிலிக் குண்டின் தலைப்பாகம் (குண்டு) தரை மீதோ அல்லது வட்டத்திற்கு வெளிப்புறத் தரைமீதோ படும்படி சுழற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஒரு போட்டியாளர் எறியும் பொழுது, எறி வட்டத்தில் உட்புற தூரத்தைத் தொட்டுவிட அனுமதியுண்டு. 6 இரும்புக் குண்டினை எறியும் முயற்சியில், சங்கிலியுடன் குண்டினை சுழற்றும்போது, குண்டானது தரையில் பட்டுவிட்டால், அது தவறான எறி என்று அறிவிக்கப்படும். ஆனால் சுழற்றும்போது குண்டு தரையில்பட்டுவிட்டால், எறியும் முயற்சியை நிறுத்திவிட்டு, மீண்டும் புதிதாக ஆரம்ப சுழற்சியில் ஈடுபட்டு எறிய முனைந்தால், அந்த எறிமுயற்சி அனுமதிக்கப்படும். 7. ஒரு போட்டியாளர் எறிவதற்காக எறி வட்டத்திற்குள்ளே வந்து விட்ட பிறகு, எறியும் முயற்சியில் ஈடுபட்ட பிறகு, தனது உடல் உறுப்புக்களில் ஏதாவது ஒன்றினால் வட்டத்திற்கு வெளியே உள்ள தரையைத் தொட்டால், வட்டத்தின் சுற்றுக்கோட்டுக் கம்பியின் உச்ச துரத்தை மிதித்தால், அல்லது தவறான முறையில் சங்கிலிக் குண்டினை கையிலிருந்து விடுவித்து விட்டால்,