பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 210 அது தவறான எறி என்று அறிவிக்கப்படுவதுடன், அந்த எறி குறிப்பேட்டில் எழுதப்படமாட்டாது. 8. எறியும் முயற்சியின் போது, மேலே கூறிய விதிகள் எதுவும் மீறப்படாத பொழுது, அவரது முயற்சிக்கு இடையூறு எதுவும் நேர்கிற நேரத்தில் சங்கிலிக் குண்டினைக் கீழே வைத்து விட்டு, வட்டத்திற்கு வெளியே வந்து விட்டு, மீண்டும் வட்டத்திற்குள் வந்து, நிலையாக நின்று, மீண்டும் புதிய எறியைத் தொடங்கிட அனுமதி உண்டு. . . . . 9. சங்கிலிக் குண்டானது எறிகிற பொழுது அல்லது காற்றில் மிதந்து செல்கிற போது உடைந்து விட்டால். அந்த எறி விதிக்குட்பட்ட முறையில் எறியப்பட்டது தான் என்றால், அது எறிந்ததாகக் கணக்கிடப் படாமல், மீண்டும் ஒரு புது எறியை எறிய வாய்ப்பு வழங்கப்படும். அந்தப் போட்டியாளர். தனது சம நிலையை இழந்து, தவறு இழைத்திருந்தால் அந்த எறி தவறென்றே அறிவிக்கப்படும். 10. போட்டியாளர், சங்கிலிக்குண்டை வீசி எறிந்து அது போய் கீழே விழுந்து தரையைத் தொடும் வரை, எறியும் வட்டத்தை விட்டு வெளியே வந்து விடக்கூடாது. பிறகு, வட்டத்தை விட்டு வெளியே வரும் பொழுது, காலடி எடுத்து வைக்கும் பொழுது வட்டத்தின் சுற்றுக் கோடான இரும்புக் கரையின் மேற் புறத்தை, வட்டத்திற்கு வெளிப்புறத் தரையை இவற்றை முதலில் தொடாமல், பாதி வட்டத்திற்கு (இருபுறத்திலும் நீட்டப்பட்ட கோடுகளுக்குப் பின்புறம்) உள்ள பகுதி வழியாக வெளியே வந்து விட வேண்டும். 11. எறியப்பட்ட சங்கிலிக் குண்டை, மீண்டும் எறிவட்டத்திற்கு அருகே கொண்டுவர, விழுந்த