பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் _ இடத்திலிருந்து எறியக் கூடாது. அதை எடுத்துக் கொண்டு வந்து தான் கொடுக்க வேண்டும். எறியை அளக்கும் விதம் 12. குறிக்கப்பட்ட 40 டிகிரி அளவான எல்லைப் பகுதிக்குள் எல்லைப் பகுதியைக் குறிக்கின்ற 50 மில்லி மீட்டர் அகலக் கோடுகளின் உட்புறத்திற்கு மேல் விழுகின்றவாறு எறிந்த சங்கிலிக் குண்டு தான் சரியான எறி என்று அறிவிக்கப்படும். எல்லைப் பகுதிகளைக் குறிக்கின்ற கடைக் கோடுகளின் மீது கொடி ஒன்றை ஊன்றிக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். - - 181வது விதியில் பாரா 8ல், கொடிகள் பற்றி அளவும் அமைப்பும் கூறப்பட்டுள்ளன. காண்க. 13. ஒவ்வொரு முறை குண்டு எறிந்ததற்குப் பிறகும் உடனே அளந்திட வேண்டும். சங்கிலிக் குண்டின் தலைப்பாகம் எந்த இடத்தில் பதிந்திருக்கிறதோ, அந்த இடத்தின் முற்பகுதி கரையிலிருந்து, வட்டத்தின் சுற்றுக் கோட்டின் உட்புறம் வரையிலும் உள்ள இடைப் பட்ட துரமே எறிந்த தூரமாகும். அளக்கும் போது அளவை நாடாவை வட்டத்தின் மையப் புள்ளியிலிருந்து சங்கிலிக் குண்டு விழுந்த முன்புற வரையிலும் தான் இழுத்துப் பிடித்து அளந்திட வேண்டும். 14. தெளிவான வண்ணம் உள்ள ஒரு சிறு கொடியை, ஒவ்வொரு போட்டியாளரும் எறிந்த அதிகமான அாரத்தில் நட்டுக் காண்பிக்க வேண்டும். எறிந்த இடத்திலேயே கொடியை ஊன்றாமல் அதற்கு நேராக உள்ள