பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - —210 சங்கிலியாகவும் இருக்க வேண்டும். அந்தச் சங்கிலி இருபுறத்திலும் துளையிடப்பட்டு, கைப்பிடியிலும், இரும்புக் குண்டிலும் பொருத்துவதற்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும். கைப்பிடி (Grip) 21. ஒற்றையான அல்லது இரண்டு துளையுடன் பொருத்தும் அமைப்பாக, கைப்பிடி அமைந்திட வேண்டும். அந்தக் கைப்பிடி உறுதியாகவும், இணைப்புகள் ஆடாதவாறு நல்ல பிடிப்புடனும் அமைந்திடவேண்டும். இரும்புக்குண்டை நன்றாகச் சுழற்றி எறியும் போது, பக்கவாட்டில் துளைப்பக்கத்தில் திரும்பிக் கொள்ளாமல், இருப்பதாகவும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் சங்கிலிக்கம்பி நீண்டு போகாதவாறும் சரியாக சேர்த்துக் கட்டப்பட்டதாக, கைப்பிடி அமைந்திடவேண்டும். 22. சங்கிலிக்கம்பியின் இணைப்பு: சங்கிலிக் கம்பியை இரும்புக்குண்டுடன் இணைக்கும் GLIT(ggil Swivel (p6opuļL6öi el6d605l Vall Bearing முறையில் பொருத்தப்பட வேண்டும். சங்கிலிக் கம்பியை கைப்பிடியுடன் இணைக்கும் பொழுது துளை போட்டு இணைக்கும் முனைப்புடன் (Loop) இணைத்திட வேண்டும். இதற்கு Swivel இணைப்பு முறை இருக்கக் கூடாது. 23. சங்கிலிக் குண்டின் அமைப்பும் அளவுகளும் மொத்த 6T60) சாதனைக்கு ஏற்கக்கூடிய குண்டின் எடை - 7.260 கிலோ கிராம்