பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் _ போட்டிக்கு வழங்கப்படும் - 7.265 கி.கி.முதல் சங்கிலிக்குண்டின் எடை - 7.285 கி.கி வரை சங்கிலிக்குண்டின் நீளம் (கைப்பிடி உட்புறத்திலிருந்து அளவு) குறைந்த அளவு - 1175 மில்லி மீட்டள் அதிக அளவு - 1215 மில்லி மீட்டள் இரும்புக்குண்டின் (Head) விட்டம் குறைந்த அளவு - 110 மில்லி மீட்டள் அதிக அளவு - 130 மில்லி மீட்டள் இரும்புக் குண்டின் புவி ஈர்ப்புத்தானம் உருண்டையான குண்டின் நடு பாகத்திலிருந்து 6 மில்லி மீட்டருக்கு மேல் போகாமல் இருக்க வேண்டும். உதாரணமாக: 12 மில்லி மீட்டர் விட்டமுள்ள ஓர் உருளை மேல் (கைப்பிடியும் அதன் சங்கிலியும் இல்லாமல்) வைக்கும் பொழுது, சமநிலையுடன் நிற்க வேண்டும். சங்கிலிக்குண்டெறியும் சுற்றுவலை (Throwing Cage) 1. பார்வையாளர்கள், அதிகாரிகள், பங்கு பெறுகிற போட்டியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்கும் பொருட்டு, எல்லா சங்கிலிக் குண்டெறிகளையும், சுற்றி வளைக்கப்பட்ட சுற்று வலைக்குள்ளேயிருந்து தான் எறிந்திட வேண்டும். இந்த விதியில் கூறப்பட்டிருக்கும் சுற்று வலை அமைப்பை பின்பற்றப்படுவதற்கான காரணமாவது: பெரிய இடுகளப்போட்டி மைதானத்தில் சுற்றிலும் பார்வையாளர்கள்