பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 220 வலைப் பிரிவினை இடது கை எறியாளர் எறியும் போதும், மாற்றி வைத்துக் கொள்ள உதவும். போட்டியின் போது, இடதுபுறத்தில் உள்ளதை வலது புறத்தில் உள்ளதை மாற்றி மாற்றி வைக்கிற பொழுது, அடிக்கடி நிகழும் வண்ணம் இரண்டு கை பழக்கம் உள்ளவர்கள் எறியும்போது எடுத்து வைக்க நேரிடும். அப்பொழுது அதிக வேலை இல்லாமலும், குறைந்த நேரத்தில் மாற்றி வைப்பது போலும் பார்த்துச் செய்வது நல்லதாகும். 4 : 2 இடது புற வலைப் பிரிவுதான் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. வலது கை எறியாளர் எறியும் பொழுது இடதுபுற வலைப்பிரிவு (Panel) எங்கே இருக்க வேண்டும் என்பதைத்தான் படம் காட்டுகிறது. வலதுபுற வலைப் பிரிவின் இறுதிப் பகுதியும் படத் தில் இடம்பெற்றிருக்கிறது. o 4 : 3 வலைப்பிரிவினை இயக்கும் பொழுது நகர்த்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வலைப்பிரிவு படத்தில் நாட்டியுள்ள படிதான் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தப்படுவதற்காகவே, வலைக் கூண்டினை வடிவமைத்துத் தயார் செய்கிற பொழுது, கவனமாக தயாரித்திருக்க வேண்டும். تھا۔ 4 : 4 முன்னர் கூறியுள்ளபடி சுற்று வலைக் கூண்டின் பகுதிகளை இயக்கும் பொழுது, சற்று நழுவியும். மேலும் கீழுமாகக் கூட இருக்கலாம். என்றாலும், நன்றாக ஊன்றப்பட்டு வலைக் கூண்டாக அமைத்த பின், சுற்றிவிடும் சங்கிலிக் குண்டு வந்து தாக்கும் பொழுது, பொருத்தப்பட்ட