பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 222, கயிறுகளைப் பரிசோதித்து, அவற்றின் வலிமையைக் கண்டறிந்த பிறகே பயன்படுத்திட வேண்டும். 6. சங்கிலிக் குண்டுக்கான சுற்று வலைக் கூண்டினையே தட்டெறியும் போட்டிக்காகவும் பயன்படுத்திட வேண்டும் என்றால், வலைக் கூண்டை இரண்டு வகையாக அமைத்துக் கொள்ளலாம். o வலைக் கூண்டுக்கு மத்தியில் 2.135 மீட்டர் அல்லது 2.5 மீட்டள் அளவுக்கு வட்டங்களைப் (போட்டுப்) பொருந்திக் கொள்ளலாம். அப்படியிருந்தால் இரண்டு எறிகளுக்கும் அந்த வலையே போதுமானதாக உதவும். ു ஒவ்வொரு எறி நிகழ்ச்சிக்கும் தனித்தனியாக எறிவட்டம் தேவை யென்றால். ஒரு வட்டத்திற்குப் பின்னால் ஒரு வட்டம் என்று அமைத்துக் கொள்ளலாம். எறிவட்டத்தினுடைய நடுக் கோட்டிலிருந்து 2.37 மீட்டர் தூரம் இருப்பது போல அமைகின்ற வட்டத்தில், தட்டெறி வட்டத்தைப் பின்புறமும், சங்கிலிக் குண்டு எறி வட்டத்தை முன்புறமுமாக இருப்பது போல் செய்திட வேண்டும். அப்பொழுது வலைக் கூண்டினை 2.83 மீட்டள் நீளமுள்ள 8 பகுதிகளாகக் கொண்டு செய்து நகர்த்தப் பயன்படும் இரண்டு வலைப்பகுதிகள் 2 மீட்டர் அகலம் உள்ளதாக ' வைத்து, வலைக் கூண்டு அசையாதபடி, ஆனால் நகர்த்துவது போன்ற அமைப்புடன் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு விரிவாக கப்பட்ட வலைக் கூண்டு, விதிகளுக்குட்பட்ட வலைக் கூண்டாகவே அமைந்து விடுகிறது. *