பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் 7. சங்கிலிக் கூண்டானது, பாதுகாப்பானதாக இருக்கும் வண்ணம், ஒடு கள மைதானத்தில், சரியான இடம் பார்த்தே அமைத்திட வேண்டும். எல்லா எறி போட்டி நிகழ்ச்சிகளிலும் இடது கை, வலது கை எறியாளர்கள் இருப்பார்கள். அவர்கள், சாதனங்களை எறியும் போது குறைந்தது 85 டிகிரி கோணத்தில் பரப்பளவானது போய் விழும். அப்படிப் போய் விழுந்தாலும், அபாயகரமான சூழ்நிலை எதுவும் உருவாகாமல் இருக்கும் படி, பொருத்தமான இடம் பார்த்து எறி வட்டங்களையும், சுற்று வலைக் கூண்டுகளையும் அமைத்திட வேண்டும். =----- சங்கிலிக் குண்டு எறியும் களத்தின் கூண்டின் அமைப்பு