பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 224 27. வேலெறிதல் (Trowing the Javelin) (விதி - 186) 1. போட்டிக்கான விதிமுறைகள் : 1. ஒவ்வொருவராக வந்து எறிகிற வாய்ப்பினைப் பெறுகின்ற வரிசை முறையானது. சீட்டுக் குலுக்கல் மூலமாகவே தேர்ந்தெடுத்து, முடிவு செய்யப்படவேண்டும். 2. போட்டியில் பங்குபெற 8 போட்டியாளர்களுக்கு மேல் வந்திருந்தால், முதலில் 3 முறை எறியும் வாயப்புகளை அனைவருக்கும் அளித்து, அதில் அதிக தூரம் எறிந்த முதல் 8 பேர்களைத் தோந்தெடுத்திடவேண்டும். அந்த 8 போட்டியாளர்களுக்கும் மீண்டும், 3 முறை எறியும் வாய்ப்பினை அளித்து, அந்த மொத்த 6 எறிகளில் ஒவ்வொருவரும் அதிக தூரம் எறிந்த கணக்கினை வைத்தே, அவர்களின் வெற்றி நிலைகளை முடிவெடுத்திட வேண்டும். வந்திருந்த மொத்த பேர்களில் முதல் 8 பேர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, 8வது இடத்திற்கு சமநிலை ஏற்பட்டுவிட்டால் (Tie), அந்த இடத்திற்கு சமநிலையில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டும் மேலும் 3 முறை எறியும் வாய்ப்புகளை அளித்து, அதில் அதிக தூரம் எறிந்த ஒருவரையே 8வது போட்டியாளராகத் தோந்தெடுத்திட வேண்டும்.