பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


3. ஏதாவது விதிமீறல் நிகழ்கிற நேரத்தில், உடனே தன்னிடம் உள்ள கொடியை உயர்த்தி அசைத்துக் காட்டுவதன் மூலம் அறிவித்தாக வேண்டும்.

4. தொடரோட்டம் நடைபெறுகிற பொழுது குறுந்தடியினை மாற்றிக்கொள்கின்ற "மாற்றும் பகுதிகளில்" (Take over points) இன்னும் அதிக எண்ணிக்கையில் துணை நடுவர்களை நடுவர் இருக்கச் செய்து நன்கு கண்காணிக்கவும் வழிவகைகளை செய்து கொள்ளலாம்.

குறிப்பு: ஓர் ஒட்டக்காரர் தன்னுடைய ஓடும் பாதையை விட்டு விலகி வேறொரு ஒடும் பாதையில் ஒடுவதை, ஒரு துணை நடுவர் கவனித்து விட்டால், அவர் எந்தப் பக்கமாக ஓடினார் என்பதை உடனடியாக அந்த இடத்தில் குறிப்பிட்டுக் காட்டியாக வேண்டும்.

நேரக்காப்பாளர்கள் : (Time Keepers) 1. இரண்டு விதமாக நேரத்தைக் குறித்துக் கொள்ள வகைகள் உண்டு. ஒன்று கைக் கடிகாரத்தின் மூலமாக. இரண்டாவது தானியங்கும் எலக்ட்ரானிக் கடிகாரம் மூலமாக. கைக்கடிகாரம் மூலம் நேரம் கணித்தல் 2. நேரக் காப்பாளர்கள் பயன்படுத்துகிற கைக்கடிகாரங்கள் நிறுத்துக் கடிகாரங்கள் (Stop Watches) அல்லது மனிதரால் இயக்கப்படுகிற எலக்ட்ரானிக் கடிகாரங்கள் என இருவகைப்படும். இந்த விதியில் குறிப்பிடப்படுவதெல்லாம் 'கடிகாரங்கள், (watches) என்றே இனி குறிக்கப்படும்.