பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் விதிக்குப்புறம்பான நெறிமுறைகள் எதற்கும் அனுமதி கிடையாது. (ஆ) மேலே எறியப்பட்ட வேலானது, கீழே தரையில் விழும்போது, வேலின் மற்ற பகுதிகள் தரையைத் தொடும் முன்பாக, அதன் உலோகமுனையானது முதலில் தொட்டால் தான், அது சரியான எறி, (Valid Throw) என்று ஏற்றுக் கொள்ளப்படும். (இ) எறியும் எல்லைக்கோட்டில் குறிக்கப்பட்டிருக்கும் இணையாகக் குறித்துள்ள கோடுகள், (Parallel lines) எதையும் போட்டியாளர் கடந்து விடக்கூடாது. (ஈ) ஒடிவந்து எறிகிற போட்டியாளர் எறியும் எல்லைக் கோட்டையாவது, நேர்க்கோணத்தில் குறிக்கப்பட்டுள்ள இணைக் கோடுகளின் முனையையாவது அல்லது எல்லைக்கோட்டின் முன்புறத் தரையையாவது அல்லது எல்லையைக் குறித்துள்ளக் கோடுகளையாவது தொட்டால் அல்லது கடந்து விட்டால், அவர் தவறினார் (Foul) என்று குற்றம் சாட்டப்பட, அந்த எறி கணக்கில் சேராமல் போய்விடும். (உ) வேலினை எறிய ஆயத்தம் செய்து அதனைத் தொடர்ந்து வேலினைக் (காற்றுப் பகுதிக்கு) மேலாக எறிந்து விட்டு, தனது முதுகுப்பாகம் எறியும் பரப்பளவு நோக்கி இருக்குமாறு நிற்க அனுமதி உண்டு. (ஊ) வீசி எறியப்பட்ட வேலானது விழுந்து தரையைத் தொடுவதற்கு முன்னதாக, எறிந்த போட்டியாளர் தான் ஓடி வந்து எறிதரையை விட்டு (Runway) வெளியேறிவிடக் கூடாது வேல் விழுந்த பிறகு, சரியாக