பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் அளவுகள் : 10. குறித்திருக்கும் எறிபரப்பிற்கும், எறிபரப்பைக் குறிக்கின்ற எல்லைக் கோட்டின் (50 மில்லி மீட்டர் அகலம்) மீதும் விழுகின்ற எல்லா எறிகளும் சரியான எறி என்றே அறிவிக்கப்படும். எறிபரப்பின் எல்லையை விரித்துக் காட்டுகின்ற மையப்புள்ளி (A) எறியும் எல்லைக் கோடான வளைவின் இரு முனைப்புறங்களிலிருந்து (B and C) விரிந்த எறி பரப்பு தான் எறிபரப்பாகும். எறி பரப்பில் குறித்திருக்கும் தூரத்தின் அளவுக்கான பகுதியில் கொடிகளை பதித்து, அடையாளம் காட்ட வேண்டும். எவ்வளவு தூரம் என்ற குறித்துக் காட்டும் பகுதிகள் 30 மீ, 50மி. 60 மீட்டள் என்ற அளவுடன் குறிக்கப்படவேண்டும். 11. வேலினை எறிந்த பிறகு, அது சரியான எறி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே, அளந்து விட வேண்டும். வேலின் நுனிப்பகுதி குத்திய இடத்தின் பின் புற விளிம்பிலிருந்து, வளைவுக் கோட்டின் உட்புற பகுதி வரையிலும் இடைப்பட்ட தூரமே எறிந்த தூரமாகும். அளக்கும்போது அளவை நாடாவை A புள்ளியிலிருந்து (படம் காண்க) தான் பிடித்து அளக்க வேண்டும். 12. ஒவ்வொரு போட்டியாளரும் அதிக தூரம் எறிந்த எறியின் இடத்தில், ஒரு கொடியை நட்டுக் காண்பிக்க வேண்டும். அந்த இடத்திற்கு அருகில் உள்ள பக்கக் கோட்டின் மீது, அல்லது பக்கக் கோட்டிற்கு வெளியில் கொடியை ஊன்றிக் காண்பிக்க வேண்டும்.