பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

21


3. மூன்று நேரக் காப்பாளர்கள் (இவர்களில் ஒருவர் தலைமை நேரக்காப்பாளராக இருப்பார்.) மற்றும் ஒன்று அல்லது இரண்டு கூடுதல் நேரக் காப்பாளர்கள் கூடியிருந்து, ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளரின் (Winner) நேரத்தைக் குறித்திடுவார்கள்.

கூடுதல் நேரக்காப்பாளர்கள் எடுக்கின்ற நேரத்தைப் பொதுவாக, தலைமை நேரக் காப்பாளர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

சில சமயங்களில், முதல் மூன்று நேரக் காப்பாளர்களில் ஒருவர் அல்லது இருவர் கடிகாரம் சரியாக இயங்கி நேரம் குறிக்கத் தவறுகிற பொழுது, ஏற்கனவே குறித்துக் கொண்டவாறு, கூடுதல் நேரக் காப்பாளர்களின் நேரத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

அதாவது, எல்லா ஒட்டப் போட்டிகளிலும், 3 கடிகாரங்களைக் கொண்டு அதிகார பூர்வமான நேரத்தைக் குறித்து கணக்கிடுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுது எல்லாம், ஒடி முடிக்கின்ற ஒட்டக்காரர்கள் அனைவரின் நேரத்தையும் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 800 மீட்டர் தூரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தூர ஓட்டங்களில் ஒரு வட்டத்தை ஓடி முடிக்கக் கூடிய நேரம் (Lap Times): 3000 மீட்டர் தூர ஓட்டங்களில் ஒவ்வொரு 1000 மீட்டர் தூரம் ஓடி முடிக்கக் கூடிய நேரத்தையும் கூடுதல் நேரக்காப்பாளர்களைக் கொண்டு நேரம் குறிக்கலாம். அல்லது முதலாவதாக ஓடி வருபவரின் நேரத்தைக் குறிக்கின்ற