பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 238 போட்டிகளிலும், இந்த நடைமுறையையே தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். 3. போட்டியின் போதே விதிகளை மீறியவர்களை நீக்கிவிட விதிமுறை அனுமதிக்கிறது. சூழ்நிலை அப்படி உடனே அறிவித்திடும் வகையில் அமையவில்லையென்றால், அந்தப் போட்டி முடிவடைந்தவுடனேயே குறிப்பிட்ட அந்தப் போட்டியாளருக்கு அறிவித்துவிட வேண்டும். 4. ஒரு போட்டியாளர் நடைப் போட்டிக்கான விதிமுறைகளை மீறி நடக்கும் பொழுது, முதல் முறையாக, எச்சரிக்கப் படுவார். அதே குற்றத்தை திரும்பவும் செய்தால், இரண்டாம் முறையாக அவரை எச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விதி 2ல் கூறியபடி, நீக்கக் கூடிய நிலை வருவதற்கு முன்னர், எச்சரிக்கை அளிக்க வேண்டும் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. ஆனாலும், ஒரு போட்டியாளர் நீக்கப்படுவதற்கு முன்பாக எச்சரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். 5. ஓடும் பாதையில் (Track) நடைபெறும் போட்டிகளில், தவறிழைத்ததற்காக நீக்கப்படுகிற நடையாள நடைபாதையை விட்டு உடனே வெளியேறிவிட வேண்டும். சாலைகளில் (Road) நடைபெறும் போட்டிகளின் போது போட்டியாளர் உடனே தான் அணிந்திருக்கும் மார்பு எண்ணை எடுத்துவிட்டு, சாலையை விட்டு நீங்கி, விலகிக் கொள்ள வேண்டும். குறிப் பு: அதிகாரிகள் , போட் டியாளர்கள் பார்வையாளர்கள் கவனத்திற்கு: போட்டியாளர்கள் தவறிழைக்கும் பொழுது எச்சரிக்கை செய்திட வெள்ளைக்