பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 240 சூழ் நிலைக்கேற்றவாறு தண்ணி தருவதை முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பு: எல்லா அகில உலகப் போட்டிகளின் போது, ஒவ்வொரு தேசத்திலிருந்தும் இரண்டு அதிகாரிகளை பானக சாலை இடத்தில் இருக்க, அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்கள் அங்கே இருந்து கண்காணிக்கலாமே தவிர, நாட்டுப் போட்டியாளர்கள் வந்து தேவையானதை எடுத்துக் கொள்ளும் பொழுது, எந்தக் காரணம் பற்றியும் கூடவே ஓடி உதவ முயற்சிப்பது. கூடவே கூடாததாகும். 7. ஒலிம்பிக் பந்தயங்களில் மற்றும் எல்லா பெரும் போட்டிகளிலும் நடத்துகிற 50 கிலோ மீட்டர் நடைப் போட்டியை, போட்டிகளில் கலந்து கொண்டு முதல் போட்டியாளராக வந்து முடிக்கிறவர், முடிக்கும் நேரம் சூரிய அஸ்தமான நேரமாக (Sun Set) இருப்பது போல், போட்டி நேரத்தை அமைத்திட வேண்டும். இது அந்த நாட்டின் சிறந்த தட்பவெப்பநிலையை போட்டியாளர்கள் அனுபவித்து மகிழ அது உதவியாயிருக்கும். 8. ஒலிம்பிக் பந்தயங்கள் மற்றும் பெரும் போட்டிகளை நடத்தும் பொழுது, 20 கிலோ மீட்டர் போட்டியை நடத்தும் பொழுது, அதன் வட்ட அமைப்பு 3000 மீட்டருக்கு மேல் போகாமலும் 1500 மீட்டருக்குக் குறைவில்லாமல் இருப்பது போலவும் பார்த்து அமைக்க வேண்டும். H 9. சாலைப் போட்டிகளை நடத்துகிற போட்டி அமைப்பாளர்கள், போட்டியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒலிம்பிக் போன்ற