பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 246 முறை தவறான, தொடக்கம் (False Start) எடுக்கிற ஒரு போட்டியாளர் அந்தப் போட்டியிலிருந்தே நீக்கப்படுவார். 7. ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சி முடிந்தவுடன் அவற்றிற்கான வெற்றி எண்களைக் கணக்கிட்டுக் குறிக்கிற வெற்றி எண் குறிப்பாளர்கள் (Scorers) தனித்தோ அல்லது மற்றவர்களுடன், இணைந்தோ உடனே ஒவ்வொருவருக்கும் அவர் பெற்ற வெற்றி எண்களை அறிவித்துவிட வேண்டும். நேரம் எடுக்கப் பின்படும் முறைகளில், ஏதாவது ஒரு முறை தான் பின்பற்றப்படவேண்டும். எலக்டிரிக் கடிகாரம் மூலம் நேரம் பார்க்கும் பொழுது, நொடிக்கு 1/100 என்பதாகக் கணக்கிடவும். வெற்றி எண் கணக்கிடும் போது நொடிக்கு 1/100 என்பதாகக் கணக்கிடவேண்டும். 8. 5 போட்டி, 7 போட்டி அல்லது 10 போட்டி நிகழ்ச்சிகளுக்கான போட்டி எதுவாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்குமான போட்டிகளில் அதிக வெற்றி எண்கள் எடுத்திருக்கும் போட்டியாளரே, வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். அந்த வெற்றி எண்கள் எப்படி கணிக்கப்பட வேண்டும் என்பதை அகில உலக அமெச்சூள் கழகம் தயாரித்துத் தந்திருக்கும் வெற்றி எண்கள் பட்டியலைப் பின்பற்றியே செய்திட வேண்டும். - 9. வெற்றியைக் கணிப்பதில் போட்டியாளர்களிடையே சமநிலை ஏற்பட்டால் (Tie) அதிகமான (போட்டி) நிகழ்ச்சிகளில் மற்றவரை விட அதிகமான மதிப் பெண்களைப் பெற்றிருக்கிறவரே, வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார்.