பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


நேரக் காப்பாளர்களால், ஒருவருக்கு மேற்பட்ட மற்றவர்களின் நேரத்தைக் குறித்துக் கணக்கிட சாத்தியமானால், அவர்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. ஒவ்வொரு நேரக் காப்பாளரும் தானே சுதந்திரமாகப் பணியாற்றலாம். அதாவது, தான் இயக்குகின்ற கடிகாரத்தை மற்றவர்களுக்குக் காட்டி அங்கிகாரம் பெற வேண்டுமென்பதோ அல்லது மற்றவர்களிடம் இது பற்றிப் பேசி கலந்துரையாடி நேரத்தை முடிவு செய்ய வேண்டுமென்பதோ கட்டாயம் எதுவுமில்லை. தான் கணக்கிட்டுக் குறித்திருக்கின்ற நேரத்தை, தன்னிடம் உள்ள அச்சிட்ட பாரத்தில் குறித்து, அதனடியில் கையொப்பமிட்டு, அதனை, தலைமை நேரக் காப்பாளரிடம் கொடுத்து விட வேண்டும். தலைமை நேரக்காப்பாளர் அந்தப் பட்டியலுடன் கடிகாரத்தை ஒப்பிட்டு சரிபார்த்து, பின்னர் அங்கீகரித்துக் கொள்வார்.

5. அதன்பிறகு, மற்ற நேரக் காப்பாளர்கள் அளித்த நேரத்தினைக் குறித்தவாறு ஒப்பிட்டு சரிபார்த்த தலைமை நேரக்காப்பாளர், அதற்குரிய விதிமுறைகளை அனுசரித்து ஆய்ந்த பிறகு, குறிப்பிட்ட அந்த ஒட்டப் போட்டியில் சரியான நேரத்தை வெளியிடுவதற்காக அனுப்பி வைப்பார்.

6. அதிகாரபூர்வமான மூன்று கடிகாரங்களில், இரண்டு கடிகாரங்கள் ஒரே அளவான நேரத்தைக் காட்டி, மூன்றாவது கடிகாரம் சற்று வித்தியாசமான நேரத்தைக் காட்டினால், ஒத்துக் காட்டிய இரண்டு கடிகாரங்களின் நேரம் தான் அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நேரமாக அறிவிக்கப்படும்.