பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

23


இரண்டு கடிகாரங்களின் சரியான நேரம் தான் கிடைத்தது என்றால், அவற்றில் அதிக நேரம் காட்டும் கடிகாரத்தின் நேரத்தையே (Longer Time) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. கையால் இயக்கப்படுகிற கைக்கடிகாரத்தில், ஒடுகள மைதானத்தில் உள்ள ஒட்டப் பாதையில் ஓடும் எல்லா ஒட்டப் போட்டிகளின் நேரத்தை 1/10 நொடி என்பதற்குள்ளாகவே குறிக்க வேண்டும்.

பாதி ஒடுகள மைதானம் - மீதி அதற்கு வெளியே என்று ஒடப்படும் ஒட்டப் போட்டிகளாக இருந்தாலும் அல்லது மாரத்தான் ஒட்டப் போட்டிகள் போல சாலைகளில் ஓடுகிற போட்டியாக இருந்தாலும், நேரம் பின்னமாக வந்தால், அதை அதிகமான நேரம் காட்டும் முறையில் எடுத்துப் பூர்த்தி செய்து குறிக்க வேண்டும்.

உதாரணம்: ஒரு மாரத்தான் போட்டியில் நேரம் எடுக்கப்படுகிறபோது 2 மணி 0.9 நிமிடம் 44.3 நொடி என்று வந்தால், அதை எழுதிக் குறிக்கும் போது 2 மணி 0.9 நிமிடம் 45 நொடி என்று குறிக்கவேண்டும்.

ஒரு கடிகாரத்தின் பெரிய முள்ளானது இரண்டு கோடுகளுக்கு நடுவே நின்று போனால், அதிக நேரத்தைக் குறித்துக்காட்டும் கோட்டின் நேரம் என்ன என்பதையே குறித்துக்கொள்ள வேண்டும்.

1/100 என்று நொடியைப் பிரித்துக் காட்டும் கைக்கடிகாரம் அல்லது கையினால் இயக்கப்படும் எலக்ட்ரானிக் கடிகாரம் பயன்படுத்தப்படுகிற பொழுது,