பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

27


5. எலக்ட்ரானிக் கடிகாரமானது, சரியாக இயங்கி நேரம் காட்டுகிறபோது, அதுவே அதிகார பூர்வமான நேரம் என்று தலைமை நேரக் காப்பாளர் அறிவிப்பார். சரியாக கடிகாரம் இயங்கவில்லையென்றால், அது சரியற்றது. தவறானது என்று தலைமை நடுவர் அறிவிப்பதுடன், பின்னர் பின்னணியில் இயங்கிய கைக்கடிகாரம் மூலம் நேரம் பார்த்துக் குறித்த நேரங்களையே அதிகார பூர்வமான நேரம் என்று அவர் அறிவித்துவிடுவார்.

6. முழுவதும் தானியங்கியான எலக்ட்ரானிக் கடிகாரத்தைப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்றால் போட்டிகளை நடத்துகின்றவர்களின் வசதிகளுக்கேற்ப அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

7. குறைந்த தூர விரைவோட்டத்திலிருந்து 10,000 மீட்டர் தூரம் வரை உள்ள ஒட்டப் போட்டிகளில், எடுக்கப்படுகின்ற நேரமானது, முடிவு காட்டும் புகைப்படம் மற்றும் நேரங்களை 1/100 என்னும் நொடிப் பிரிவுக்குள்ளாகக் குறிக்கப்படுதல் வேண்டும்.

10,000 மீட்டள் தூரத்திற்கு மேலாக உள்ள ஒட்டப் போட்டிகளில் எடுக்கப்படும் நேரமானது, 1/100 நொடிக்குள்ளாகப் பகுக்கப்பட்டுக் காட்ட வேண்டும் என்றாலும், அதை அடுத்த 1/10 நொடிக்குள்ளாகக் குறித்துக் காட்ட வேண்டியது மிக மிக முக்கியமாகும். உதாரணமாக 20 கிலோ மீட்டர் தூரத்தை நேரம் எடுக்கிற பொழுது 59:2632 நொடி என்றிருந்தால் அதை 59:26.4 என்றே குறித்திட வேண்டும்.