பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


ஒடுகள மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியிலும் நடத்தப்படுகிற ஒட்டப் போட்டிகளில் குறிக்கப்படுகின்ற நேரத்தை, 1/100 பகுதியாகக் கொண்டு அறிந்து, அதை அதிக அளவில் உயர்த்திக் குறிக்க வேண்டும், உதாரணமாக, ஒரு மாரத்தான் போட்டியில் எடுக்கப்பட்டிருக்கும் நேரம் 2 மணி 9 நிமிடம் 4432 நொடிகள் என்று வந்தால், அதை 2 மணி நேரம் 9 நிமிடம் : 45 நொடிகள் என்றே குறித்திடவேண்டும்.

8. தானியங்கியான எலக்ட்ரானிக் கடிகாரமானது ஒட்டம் ஆரம்பிக்கும் அல்லது முடிவடையும் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அதில் எடுக்கப்படுகிற நேரம் அதிகாரப்பூர்வமானது என்று அறிவிக்கப்படமாட்டாது. ஆரம்பத்திலும் முடிவெல்லையிலும் இருந்தால் தான் ஏற்றுகொள்ளப்படும்.

ஓடவிடுபவரும் திருப்பி அழைப்பவர்களும்

(The Starter and Recallers)

ஒடுகிற போட்டியாளர்கள் அனைவரும், ஒட்ட ஆரம்பத்தில் அவர்களுக்கு உரிய ஒடும் இடங்களில் சரியாக நிற்கின்றார்களா, அவர்கள் துப்பாக்கி ஒலி கேட்டு சரியாக ஓட்டத்தினைத் தொடங்குகின்றார்களா என்பதைக் கண்டறிந்து, சரியாக செயல்படுத்துகின்ற முழு பொறுப்பினையும் உடையவராக ஓடவிடுபவர் விளங்குகிறார். ஓட்டக் காரர்களை ஓட விடுவதற்கு முன்னதாக, நேரக்காப்பாளர்கள் மற்றும் நடுவர்கள், துணை நடுவர்கள் அனைவரும் தங்களது கடமையாற்றத் தயாராக