பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

29


இருக்கின்றார்களா என்பதையும் இவர் கண்டறிந்து உதவி செய்து கொள்ள வேண்டும்.

ஓடும் பாதைகளில் நடத்தப்படுகிற எல்லா ஒட்டப் பந்தயங்களையும் ஓடவிடுவதற்கு முன்னர் ஓட விடுபவர், ஒவ்வொரு ஒடும் பாதையிலும் ஓடுவதற்குத் தயாராக இருக்கின்ற ஒட்டக்காரர்கள் தெளிவாகக் கேட்கும் வண்ணம், தமது கட்டளைகளை (Command) சத்தமாக அறிவிக்க மைக்ரோபோன் அதாவது ஒலிபெருக்கும் கருவியின் மூலமாக, ஒலி பெருக்கிகளுக்கு இணைப்புத் தந்து, அதன் பிறகு அறிவித்து, ஓட விட வேண்டும்.

இது போன்ற ஒலிபெருக்கித் தரும் சாதனங்களைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை அமைந்திருந்தால், ஒட்டக்காரர்களுக்குத் தான் அறிவிக்கும் கட்டளையானது நன்றாகக் கேட்பது போல அருகாமையில் வந்து நின்று கொள்ள வேண்டும்.

எலக்ட்ரானிக் தொடர்புள்ளவாறு அமைக்கப் பட்டிருக்கும் துப்பாக்கி அல்லது அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தும் சாதனங்களின் அருகே நிற்கும் போது, பார்வைக்குட்படாதவாறும் கட்டளைகளைக் கேட்க இயலாதவாறும் போன்ற சூழ்நிலைகள் ஒட்டக்காரர்களுக்கு அமையாதவாறு, ஓடவிடுபவர் சரியான ஓரிடத்தில் நின்று கொண்டு ஓட விட வேண்டும்.

3. ஒட்டப் பந்தயங்களின் போது, ஒட விடுபவர் தனக்கு உதவியாக, ஒன்றுக்கும் மேற்பட்ட 'திருப்பி