பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

31


ஓடவிடுபவரின் உதவியாளர்கள்
(Starter's Assistants)

1. ஒட விடுபவரின் உதவியாளர்கள் கீழ்க்காணும் முறையில் செயல்படவேண்டும். அதாவது, அந்தந்தப் போட்டியில் பங்கு பெறும் ஒட்டக்காரர்கள் அவர்களுக்குரிய போட்டிகளில், தேர்வுப் போட்டிகள் (Heat) முதலியவற்றிற்கு சரியாக வந்திருக்கின்றார்களா;

வந்தவர்கள் அனைவரும் தங்களுக்குரிய 'ஒட்ட எண்களை' (Numbers) அணிந்திருக்கின்றார்களா; மார்புப் புறத்தில் ஒரு எண்ணையும் முதுகுப்பக்கத்தில் ஒரு எண்ணையும் சரியாக அணிந்திருக்கின்றாள்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்திடவேண்டும்.

எல்லா தூரங்களிலும் ஓட விடப்படும் ஒட்டப் போட்டிகளுக்கு, தேர்ந்தெடுக்க, ஒட்டக்காரர்கள் ஒடுகின்ற திசைப்பக்கமாக இடப்புறமிருந்து வலது புறமாக எண்களைக் (Numbers) கொடுத்து தேர்வு செய்திட வேண்டும்.

2. அவ்வாறு எண்களைக் கொடுத்து, அவரவருக்குரிய ஒடும் பாதைகளுக்குரிய எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்தந்த எண்ணுள்ள ஒட்டக்காரர்களை வரிசையாக, அந்தந்த ஓட்டப்பாதையில், ஒடுமிடத்தில் நிறுத்திட வேண்டும். அதற்கு முன்பாக அந்தந்த ஓடும் பாதையை உடையவர்களை, ஒடத் தொடங்க விடும். கோட்டினில் வந்து முதலில் நிற்க வைத்து, பிறகு அவர்களை அவர்களுடைய ஒடத் தொடங்கும் கோட்டிற்கு அருகில் போய் நிற்கச் செய்து விட்டு, அதனை ஒட விடுபவருக்கு அறிவிக்க வேண்டும்.