பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


இத்தகைய குறிப்புகளை வெற்றி எண் குறிப்பாளரிடமிருந்து பெற்ற பிறகே அறிவித்திட வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அளவையாளர்
(The Official Surveyor)

ஒட்டப்பாதைகள், அவற்றின் தூரங்கள் மற்றும் தாண்டக் கூடிய மணற்பரப்புகள், எறிவட்டங்கள், எறிவிழும் பரப்புகள், வளைவுகள் எல்லாவற்றையும் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னதாக, சரியாக அளந்து, செப்பனிட்டுத் தயாராக வைத்திருக்கும் பொறுப்பு அளவையாளருக்குரியதாகும்.

போட்டிக்கு முன்னதாக, எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை சோதித்து விட்டு, அதனை நுண்ணியல் மேலாளருக்கும், தலைமை நடுவருக்கும் உத்திரவாதத்துடன் உறுதி அளிப்பது இவரது கடமையாகும்.

காற்று வேகப்பதிவாளர்
(The Wind Gauge Operator)

போட்டிக்கான விதிமுறைகளின் படியே, காற்றளக்கும் கருவி அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை, பதிவாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டியின் போதும் ஒடும் திசை நோக்கி அல்லது எறியும் திசை நோக்கி, காற்றடிக்கும் வேகத்தை எண் குறிப்பாளருக்கும். கொடுத்துவிட வேண்டும்.