பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

43


அதே போட்டியில் கலந்து கொள்ளும் உயரத்தாண்டும் அல்லது வேலெறியும் போட்டியாளர்கள் அணிந்து கொள்கிற காலணியின் அளவு சற்று மாறுபட்டிருக்கிறது. அதாவது ஒரு காலணியின் குதிகால் பகுதியிலிருந்து முன்புறமாக 2 மில்லி மீட்டர் நீளத்திற்கு மேல், அந்தக் காலணியின் நீளம் அமைந்திருக்கக் கூடாது.

காலணியின் அடிபாகத்தின் கனம்

ஒரு காலணியின் குதிகால் பாகத்தின் கனம் (Thickness) 6 மில்லி மீட்டள் உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நடைபோட்டிக்கு அணியும் காலணியின் குதிகால் உயரம் 13 மில்லி மீட்டர் உயரத்திற்கு மேல் போகக் கூடாது.

நீளத்தாண்டல், மும்முறைத்தாண்டல் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள், தங்கள் காலணி கால் வைக்கும் பகுதியில் உள்ளே சிறு அட்டை போன்றவற்றை வைத்துக்கொள்ள அனுமதியுண்டு, அப்படியிருந்தாலும், அவர்களது காலணியின் குதிகால் உயரம் 5 மில்லி மீட்டர் அளவுக்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

போட்டியாளர்கள் காலணியின் உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்த விதமான உதவி சாதனத்தை வைத்துக் கொண்டாலும், அந்தக் காலணியின் குதிகால் உயரம் 3 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. அப்படிப் பட்ட காலணிகள் போட்டிக்கு அணிய அனுமதி இல்லை.