பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



44

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


போட்டியாளருக்குரிய எண்கள்
(Numbers)

5. ஒவ்வொரு போட்டியாளருக்கும் இரண்டு எண்கள் (அட்டைகள்) தரப்படும். அவற்றில் ஒன்றை மார்புப் பகுதியிலும் இன்னொன்றை முதுகுப் புறத்திலும் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

போட்டியாளர்கள் கொண்டிருக்கும் எண்களும், போட்டி நிகழ்ச்சி நிரலில் உள்ள எண்களும் ஒரே நம்பராக இருக்க வேண்டும்.

விளையாட்டு முழுகால் சீருடைகள் (Track Suit) அணிந்திருந்தாலும், முன்னர் கூறிய முறையில்தான், முன்னும் பின்னும் அணிந்திருக்க வேண்டும்.

உயரத்தாண்டும் போட்டியில், அல்லது கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் பங்கு பெறுகிற போட்டியாளர்கள், முன் புறத்தில் அல்லது முதுகுப் புறத்தில், ஏதாவது ஒரு புறத்தில் எண்ணை அணிந்து கொண்டால் போதுமானதாகும்.

புகைப்படத்தின் மூலம் இறுதி முடிவுகளை அறிய, புகைப்படக் கருவிகளைப் பொருத்தியுள்ள போட்டிகளின் போது, போட்டியாளர்கள், தங்களது கால்சட்டையின் மேற்புறத்தில் அல்லது பக்கவாட்டில் மேலும் ஒரு எண்னை

அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.