பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

45


சரியான பங்கு பெறும் எண்கள் இல்லாமல், எந்த ஆ_டலாளரும் (Athlete) போட்டியில் பங்கு பெறவே முடியாது.

போட்டியிடுபவரது எண் அட்டைக்கு மேலே, அந்தப் போட்டியாளரை ஊக்குவிக்கும் புரவலர் (Sponsor) பெயர் இடம்பெறுவதை, போட்டிகள் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் அனுமதி அளித்திருக்க வேண்டும்.

ஒரு போட்டியாளர் அணியும் எண்ணின் அளவானது 150மி. மீ x 25 மி.மீ. ஆகும். இதே அளவு, இதே அட்டை போன்று தான், போட்டியில் பங்கு பெறும் அனைவரது எண் அட்டைகளும் ஒத்த மாதிரி ஒரே அளவில் இருக்க வேண்டும்.

ஒடுகளப் பாதையில் இடையூறுகள்
(Obstruction on the track)

6. ஏதாவது ஒரு போட்டியாளர் ஓடும் பாதையில் நின்று கொண்டு, மற்றொரு போட்டியாளர் ஓடுவதை அல்லது முன்னேறுவதைத் தடைசெய்வது போல பாவனை செய்வது, அல்லது குறுக்கே ஒடுவது, அல்லது தடை செய்வது போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டாலும், அவர் வெளியேற்றப்பட வேண்டியவராகிறார்.

ஏதாவது ஒட்டப் போட்டி ஒன்றில், மேற்கூறிய காரணங்கள் ஒன்றினால் தடைசெய்த ஒருவர் வெளியேற்றப்படுகிற பொழுது, அவரை நீக்கிய பிறகு,