பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

49


தாண்டுகிற நிகழ்ச்சியில், கால் உதைத்து எழும்பும் பகுதியில் (Take-of Ground) காற்றளவு சக்தியினை அளக்கும் கருவி வைக்கப்படல் வேண்டும். அது போட்டியாளரின் தாண்டும் திசையையும், காற்றடிக்கும் வலிமையையும் அறிந்து கொள்ள உதவும்.

ஒரே சமயத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல்

11. ஒரு போட்டியாளர் ஒட்டப் போட்டியில், அதே சமயத்தில் எறிகிற அல்லது தாண்டுகிற களப் போட்டியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற பதிவு செய்து கொண்டிருந்தால், நடுவர்கள், அவரை தாண்டுகிற அல்லது எறிகிற வாய்ப்பினை முன்னதாகவே கொடுத்து, அவரை மற்றொரு போட்டிக்குப் போகச் செய்யலாம்.

போட்டிக்கு முன்னர், வாய்ப்பு வரிசை முறை வகுக்கப்பட்டிருந்தாலும், வேறொரு போட்டியில் போய் பங்கு பெறுவதற்காக, அவருக்கு முன் கூட்டியே இப்படி வாய்ப்புக்களை அளித்து அனுப்பி வைக்கலாம்.

12. களப் போட்டி நிகழ் ச் சிகளில் , ஒரு போட்டியாளருக்கு ஒரு சுற்றில் (Round). ஒரு எறி அல்லது ஒரு தாண்டும் வாய்ப்பு தான் வழங்கப்படவேண்டும். தொடர்ந்தாற்போல் ஒன்றுக்கு மேல் மற்றொரு வாய்ப்பினை வழங்கக் கூடாது.