பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


16. ஒடும் பாதையில் ஒடுகிற தொடரோட்டத்தைத் தவிர, மற்ற ஒட்டப்போட்டிகள் நடைபெறும் பொழுது, போட்டியாளர்கள் தங்களுக்கு உதவும் பொருட்டு ஒட்டப்பாதையில் அடையாளக் குறிகள் (Check Marks) குறித்து வைத்துக் கொள்வதோ, அல்லது ஏதாவது ஒரு பொருளை அடையாளத்திற்கு வைத்துக் கொள்வதோ, அல்லது ஒட்டப் பாதையின் வெளிப்புறத்தில் அடையாளம் வைப்பதோ கூடாது.

வெற்றி எண்கள் எவ்வளவு?

17. போட்டிகளில், இறுதி வெற்றியின் முடிவானது, வெற்றி எண் தருவதன் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்மானிக்கப்படும் வெற்றி எண்களின் (Points) மதிப்பானது, போட்டியிடும் நாடுகள் போட்டிக்கு முன்பாகக் கூடி, எவ்வளவு என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு செய்ய இயலாவிடின் , கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வெற்றி எண் பட்டியலையே பின்பற்றிக் கொள்ளலாம். அதற்காகவே இங்கே தரப்பட்டுள்ளது.

அ) இரண்டு அணிகள் போட்டியிடும்போது, போட்டிக்கு ஒரு அணியில் 2 பேர்கள் தாம் போட்டியாளர்கள் என்றால், அதற்குரிய வெற்றி எண்கள் 5,3,2,1.

ஆ) மூன்று அணிகள் போட்டியிடும்போது, ஒரு அணிக்கு 2 போட்டியாளர்கள் என்றால், அல்லது இரண்டு