பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

53


அணிகள் போட்டியிடும்போது, ஒரு அணியில் மூன்று போட்டியாளர்கள் வீதம் போட்டியிட்டால், அதற்குரிய வெற்றி என்கள் 7,5,4,3,2,1.

(இ) தொடரோட்டப் போட்டிகளில், இரண்டு அணிகள் போட்டியிட்டால் 5.2.

தொடரோட்டப் போட்டிகளில், மூன்று அணிகள், போட்டியிட்டால் 7.4.2.

தொடரோட்டப் போட்டிகளில் 6 அணிகள் போட்டியிட்டால் 7,5,4,3,2,1.

குறிப்பு : ஒரு போட்டி நிகழ்ச்சியில் (Event) பங்கு பெறுகிற போட்டியாளர்கள் (தொடரோட்டப் போட்டியில் அணிகள்) எண்ணிக்கையை வைத்துக் கொண்டே, மேலே குறித்திருக்கும் வெற்றி எண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஏதாவது ஒரு போட்டி நிகழ்ச்சியில , போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் வெற்றி எண் பட்டியலை மாற்றக்கூடாது.