பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

39


தேர்வு வரிசை முறையை செய்திடவேண்டும். இறுதியில் அதாவது இறுதிப்போட்டிக்கு 8 பேர்கள் தகுதி பெறுவது போல, தேள்வோட்ட வரிசை முறையை ஒழுங்குபடுத்திட வேண்டும்.

குறிப்பு: தேர்வோட்ட வரிசையில் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது, ஒவ்வொரு போட்டியாளரின் சிறப்பு சாதனைகள், நேரங்கள் இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒவ்வொரு கட்டப் போட்டிக்கும் போட்டியாளர்களைப் பதிவு செய்வது நல்லது.

அந்தத் தேர்வு முறையானது, இறுதிப்போட்டியில் சிறந்த போட்டியாளர்கள் தேர்வாவது போல இருக்குமாறு பார்த்துக்கொள்வதை, கழகம் சிபாரிசு செய்கிறது.

3. எந்தப் போட்டியாக இருந்தாலும், முதல் வரிசையில், அதிகமான ஒட்டக்காரர்களைத் தேர்வு செய்ய நேரும் போது, ஒவ்வொரு தேசமாகத் தேர்ந்துகொண்டு அதிலிருந்து ஒவ்வொரு போட்டியாளராக எடுத்து வரிசைப் படுத்திட வேண்டும்.

அதற்குப் பிறகு எடுக்கின்ற ஒட்ட வரிசையிலும் (draw) முன்னர் பின்பற்றிய ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒவ்வொரு ஒட்டக்காரராகத் தேர்ந்தெடுத்து, ஒரு ஒட்டப்போட்டியில் (Heat) ஓடச் செய்கிற முறையைப் பின்பற்ற வேண்டும்.

4. ஒரு போட்டியாளர் எந்த ஓட்ட வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரோ, அந்த ஒரு தேர்வோட்டப்