பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

57


தூரம் ஒய்வு நேரம்
200 மீ ஓட்ட தூரம் வரை 45 நிமிடங்கள்
200 மீ தூரத்திலிருந்து 1000 மீ.வரை 90 நிமிடங்கள்
1000 மீ தூரத்திற்கு மேலாக 180 நிமிடங்கள்

தளப்போட்டி நிகழ்ச்சிகள் (FIELD EVENTS)

6. களப்போட்டி நிகழ்ச்சிகளில் எந்தப் போட்டியாக இருந்தாலும், தேவையானால், தகுதி நிர்ணயிக்கும் போட்டிகள் (qualifying Competitions) நடத்தủ படவேண்டும். அதாவது யார் யார் போட்டியிடத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதை அறிய அத்தகைய போட்டிகளை நடத்தி ஆக வேண்டும்.

ஏற்கனவே நிகழ்த்தியிருக்கும் ஒருவரது சாதனைகளை வைத்துக் கொண்டு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை தவறானதாகும்.

ஒரு போட்டி நிகழ்ச்சிகளுக்குத் தகுதி பெற எவ்வளவு தூரம் அல்லது உயரம் என்பதை, போட்டி நடத்திடும் கழகத்தாரும், ஒவ்வொரு நாட்டின் நுண்ணியல் சார்பாளர்களும் கலந்துரையாடி நிர்ணயித்திடவேண்டும்.

போட்டியாளர்கள் சீட்டுக் குலுக்கலின் மூலம். பொறுக்கப்பட்டு, குறிக்கப்பட்டுள்ள, வரிசை முறைப்படி தான் வாய்ப்பினை (Trial) பெற வேண்டும் அல்லது அவர்கள் பிாய்ப்பின் வரிசை முறையானது ஏற்கனவே நிகழ்ச்சிநிரல் புத்தகத்தில் குறித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வரிசைப்படியே ஒருவர். பின் ஒருவராக வந்து வாய்ப்பினைப் ப்யன்படுத்திக் கொள்ள வேண்டும்.