பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அமெச்சூர் அதெலடிக் கழகத் தால் உருவாக் கப் பட்டிருக்கின்றன. அவற்றினைப் பின்பற்றி, பெரும் போட்டிகளை நடத்தும் பொறுப்பேற்றிருக்கும் அமைப்பாளர்கள், போதை மருந்துக் கட்டுப்பாட்டு முறை பற்றி, போட்டிகளுக்கு முன்பாக, சோதனைகள் நடத்தி, தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

போதைப் பொருள் சோதனைக் கமிட்டி ஒன்று போட்டி நடத்துவோரால் நிறுவப்பட்டு, போட்டிக்கு முன் முடிவு செய்யும், அந்தக் கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் பட்டியல் பின்வருமாறு:

1. ஒரு மருத்துவப் பிரதிநிதி (தலைவர்)

2. அகில உலக அமெச்சூர் அதெலடிக் கழகத்தில் இருந்து (I.A.A.F) ஓர் அங்கத்தினர் அல்லது பிரதிநிதி.

3. போட்டியை நடத்துகின்ற நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தகுதி பெற்ற மருத்துவ அதிகாரி.

இந்த மூவர் அடங்கிய மருத்துவக் குழுவானது, போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, எவ்வாறு போதை மருந்து உட்கொண்டதை சோதிப்பது என்பதைப் பற்றி, கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவ்வாறு முடிவெடுப்பது, இறுதிநிலையை அடிப்படையாகக் கொண்டதா அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக அழைத்து சோதனையிடுவதா போன்றவற்றை மனதில் கொண்டு, தீர்மானித்திடவேண்டும். குறிப்பிட்ட சில