பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


6. இவ்வாறு கூறப்பட்டவர்கள் விளக்கமாகக் கூறிட, போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, போதைப் பொருள் சோதனைக்கான மனுத்தாள் மூலம், அந்த சோதனைக் கமிட்டிக்கு மனு செய்து கொள்ள வாய்ப்பு உண்டு.

7. ஒரு போட்டியாளர் உடலில் போதைப் பொருள் இருக்கிறது அல்லது அவர் சிறுநீரில் போதைப்பொருள் கலந்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டால், அவர் உடனே அந்தப் போட்டியில் பங்கு பெறாமல் நீக்கப்பட்டு விடுவார். இந்த விவரத்தை அந்த நாட்டு தேசிய தலைமைக் கழகத்திற்கும், அகில உலக அமெச்சூர் அதெலடிக் கழகத்திற்கும் உரியவர்கள் தெரிவித்து விடவேண்டும்.

வேறு யாராவது, போட்டியாளர்களுக்குப் போதைப் பொருட்கள் தந்து உதவினாலும் அல்லது போதைப் பொருளை உட்கொள்ளத் தூண்டினாலும் அவர்கள் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். அகில உலக அமெச்சூள் அதெலடிக் கழக விதிமுறைக்கு இது போன்ற செயல் புறம்பானது என்பதால், அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை போன்ற செயல்கள் மேற்கொள்ளப்படும்.

மேலே கூறியன போன்ற போதைப் பொருள் விவகாரங்கள், தேசிய அளவில் அல்லது அகில உலக அளவில் நடைபெறுகிற போட்டிகளின் போது நடைபெற்றால்,