பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

63


இது போன்ற குற்றத்தை, அகில உலக அமெச்சூர் அதெலடிக் கழகத்திற்குப் பொறுப்பானவர்கள் கட்டாயம் அறிவித்து விட வேண்டும்.

8. எவ்வாறு போதை மருந்து உட்கொண்டதை அறிவது பற்றி சோதனைகளை மேற்கொள்வது; சிறுநீர் சேகரித்து அதனை சான்றாகக் கொள்வது; எவ்வாறு அதனை ஆராய்ச்சி செய்வது; எத்தகைய பரிசோதனை சாலைகளில் சோதனை மேற்கொள்வது; போன்ற அனைத்தும், அகில உலக அமெச்சூர் அதெலடிக் கழகம் நிறுவுகிற மருத்துவக்குழு முடிவு செய்யும்.

போட்டி நடத்துகின்ற நாடுகளின் தலைமைக் கழகத்திற்கும், மற்றும் பொறுப்பான நிர்வாகிகளுக்கும், மேலே கூறிய குறிப்புகளும் , விவரங்களும், விதிமுறைகளும், அதிகாரிகள், போட்டியாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த விவரங்கள் அடங்கிய விதிமுறைகளின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்.


குறிப்பு: போதை மருந்துகளின் பட்டியலை கடைசிப் பக்கத்தில் காண்க