பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


6. அளவுகளும் எடைகளும்
(MEASUREMENTS AND WEIGHT)
(விதி - 145)

1. எல்லா அளக்கின்ற அளவைகளும் (Measurements), அதாவது சரியானதென்று அனுமதிக்கப்பட்ட அளக்கும் நாடாக்களும் இரும்புத்தகடால் அல்லது கண்ணாடி நாரிழையால் (Fibre Glass) ஆக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

எல்லா எறியும் சாதனங்களும், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட எடைக் கருவியால் எடை பார்க்கப்பட்டு, சரியான எடையுள்ளனவாக இருத்தல் வேண்டும்.

2. ஒடும் பாதைகளை, வளைவுகளை (Track) அளக்கும்போது, தனிப்பட்டவாறு இரண்டு முறை தனித்தனியே அளக்க வேண்டும். அவ்வாறு அளந்து பார்க்கிறபொழுது, இரண்டு அளவுகளும் 0.0003 x +0.01 என்று வித்தியாசமுள்ளதாக இருந்தால் அவற்றை அனுமதிக்கலாம். L என்பது ஓடும் பாதையின் நீளம் மீட்டரில் அளக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதாகும்.

குறிப்பு: இரண்டுமுறை தனித்தனியே அளந்த பிறகு ஏற்படுகிற நீள வித்தியாசம் இப்படி இருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

100 மீட்டர் தூரம் : 0.04 மீ