பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

65


400 மீட்டர் தூரம் : 0.13 மீ

3. எறிகளை (Throws) இரும்புக் குண்டு எறிதல் மற்றும் தாண்டும் நிகழ்ச்சிகளை (Jumps) அளக்கும்பொழுது, தாண்டும் நிகழ்ச்சி என்றால், தாண்டிக் குதிக்கின்ற எல்லையில் (Take off-Point) வட்டத்தின் பகுதியில் அல்லது எல்லையைக் குறிக்கும் தோட்டுப்பகுதியில் (Search Line) நாடாவைப் (Tape) பிடித்து அளக்கின்றவர் சரியாக வைத்திட, எறிந்த, அல்லது தாண்டிய தூரத்தை அளந்திடவேண்டும்.

தூரத்தைக் கடந்திருப்பதைவிட, அளக்கும் பொழுது 0.01 மீட்டர் தூரம் சற்று குறைவாகவே எப்பொழுதும் அளந்து கணக்கிடப்படவேண்டும்.

அதாவது, 0.01 மீட்டர் தூரம் என்றால், அது பின்னமாக (Fractions) வருவதால், அதை கணக்கிடாது தவிர்த்துவிடலாம்.

தட்டெறிதல், வேலெறிதல், சங்கிலிக் குண்டு எறிதல் போன்ற எறியும் நிகழ்ச்சிகளை அளக்கும் பொழுது, 0.002 மீட்டர் தூரம் என்றால் கூட, அதை அப்படியே அளந்து குறித்திட வேண்டும். உதாரணம் 62.44மீ, 62.46மீ என்றால் அதை அப்படியே குறித்துவிடவேண்டும்.

உயரம் தாண்டும் நிகழ்ச்சிகளில், தரையிலிருந்து மேற்புறமாக, குறுக்குக் கம்பத்தின் கீழ்புறம் வரை, செங்குத்தாக இருக்குமாறு பார்த்து நேராக அளந்திட வேண்டும்.

4. விஞ்ஞானக் கருவிகள் மூலம் அளந்திடும் நிலைமை ஏற்படுகிறபோது, போட்டிகள் நடைபெறுகின்ற நாட்டின், அரசு அங்கீகரித்துள்ள எடைகள், அளவுகள்