பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



66

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


கண்காணிக்கும் துறையினர், கருவிகளை சரிபார்த்து பூரணமாக, அங்கரீகரிக்கப்பட்ட பிறகே, பயன்படுத்திடவேண்டும்.

5. சாலைகளின் ஒடும் ஒட்ட நிகழ்ச்சிகளுக்கான தூரங்களை அளக்கிற பொழுது, சாலைகளின் குறைந்த தூரம் காட்டும் பகுதியை அளந்தே குறித்திடவேண்டும். (அதிக தூரம் காட்டும் பகுதியில் ஒட்டக்காரர்கள் ஓடினாலும், குறைந்ததூரம் காட்டுகிற சாலைப் பகுதியை அளந்துதான் தூரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஒடுகிற தூரத்தின் அளவை எக்காரணம் கொண்டும் குறிக்கப்பட்டுள்ள அங்கீகாரமான தூரத்தைவிட குறைத்து அளந்திடக்கூடாது.

மாரதான் ஓட்டத்திற்கான தூரம் 42195 மீட்டள் ஆகும். இதற்கான தூரத்தை அளக்கும் பொழுது, ஏற்படுகிற துர வித்தியாசம் 50 மீட்டர் தூரத்தைக் கடந்துவிடக் கூடாது. உதாரணமாக, மாரதான் ஓட்டத்தின் தூரமானது 42195 மீட்டருக்கும் 42245 மீட்டருக்கும் இடைப்பட்ட தூரமாகவே இருக்கவேண்டும்.

குறிப்பு: தூரங்களை எவ்வாறு அளந்து குறிக்க வேண்டும் என்கிற குறிப்புக்கள் அடங்கிய விதிமுறைகள் யாவும், அகில உலக அமெச்சூர் கழகத்தினரிடம் விண்ணப்பித்துக் கேட்டுப் பெறலாம்.